யூ-டியூபர் இர்பானை மன்னிக்க முடியாது.! மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடீயோவை வெளியிட்ட யூ-டியூபர் இர்பானை மன்னிக்க முடியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian - Youtuber Irfan

சென்னை : சமீபத்தில் பிரபல யூ-டியூபர் இர்பான் தனது யூ-டியூப் பக்கத்தில் தனது குழந்தை பிறக்கும் சமயத்தில் எடுக்கப்பட் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் மருத்துவர்கள் முன்னிலையில் கத்தரிகோலால் வெட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மருத்துவர்கள் இருக்கும் போதே, அவர்களின் முன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய இர்பானுக்கு மருத்துவர் சங்கங்கள் சார்பில் கண்டனங்கள் வலுக்கின்றன. இதுகுறித்து விளக்கம் கேட்டு இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக இர்பான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இன்று பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”  குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடீயோ  வெளியிட்ட யூ டியூபர் இர்பானை மன்னிக்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு மருத்துவத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது மன்னிக்கக்கூடியது அல்ல., கண்டிக்கக்கூடியதாகும். இந்த விவகாரத்தில் ஏற்கனவே மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்