சென்னை: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரினார்.
பிரபல யூடியூபர் இர்பானின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தன் குழந்தையின் பாலினம் குறித்து யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்,என்னதான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, “கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கருவின் பாலினத்தை ஸ்கேன் செய்யும் மையங்கள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை கூறியது.
மேலும், யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட வீடியோவை உலகம் முழுவதும் பலர் பார்த்து பகிர்ந்துள்ளனர். இத்தகைய செயலால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறையும் இவ்வாறு, பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதாக இர்ஃபானுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தற்பொழுது, அந்த சர்ச்சைக்குரிய வீடியோ பேசு பொருளான நிலையில், தனது சமூக வலைதளங்களில் இருந்து அந்த வீடியோவை நீக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல், நேற்று வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.
ஆனால், இர்ஃபான் மன்னிப்பு கோரினாலும் அவர் மீது, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில், ஒரு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்துக் கண்டறியவும், அதை அறிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…