#BREAKING: யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம் ..!

Published by
murugan

யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பாவை பாஜகவில் இருந்து நீக்கியதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.
ராகவன் அறிவித்தார்.

மதன் ரவிச்சந்திரன் என்ற யூ-டியூபர் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை ‘Madan Diary’ என்ற யூ-டியூப்பில் வெளியிட்டார். இந்நிலையில், யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கியதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை Ex IPS அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்போடர் மாதம் மதன் ரவிச்சந்திரன் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

பாஜகவில் உள்ள பல தலைவர்களின் வீடியோக்களும் இனி வரும் நாள்களில் வெளியாகும் என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் இன்று முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

11 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago