வீட்டின் முன் செல்போன் பேசாதீர்கள் என கூறியவரை கொலை செய்த இளைஞர்கள்!
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தை சார்ந்த ரத்தினம்(65).அதே பகுதியே சார்ந்த பிரகாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் ரத்தினத்தின் வீட்டின் அருகே வந்து அடிக்கடி போன் பேசி உள்ளனர்.இதை பார்த்த ரத்தினம் இனிமேல் இங்கு வந்து போன் பேசாதீர்கள் என தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதில் கோபமடைந்த அந்த இரண்டு இளைஞர் ரத்தினத்தை கீழே தள்ளி உள்ளனர்.இந்த சம்பவத்தில் ரத்தினம் உயிர் இழந்தார்.இதை தொடர்ந்து ரத்தினத்தின் மகன் ராமு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இரண்டு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் சுவாமி மலை போலீசார் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில் ரத்தினத்திற்கு கல்லூரியில் படிக்கும் மகள்கள் உள்ளதும். அதனால் ரத்தினம் வீட்டின் அருகே வந்து அடிக்கடி போன் பேச கூடாது என கூறியது. அதனால் கொலை செய்தது தெரியவந்தது.