ஊரடங்கின் போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், தோப்புக்கரணம் போடவைத்த காவல்துறை
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தமிழக அரசின் சார்பிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனாலும் பொதுமக்கள் இந்த ஊரடங்கின் மகத்துவத்தை உணராமல், தனிமைப்படுத்துதல் குறித்த அவசியத்தை உணராமல் பொது இடங்களில் கூடும் நிலை உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளனர் .அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்த்துறையினர் கொரோனா பாதிப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.பின்னர் அந்த இளைஞர்களை தோப்புக்கரணம் போடவைத்தனர் காவல்த்துறையினர்.