பெண் வேடத்தில் ஏடிஎம்ஐ கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்!
சென்னையில் சுமார் 2 மணியளவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது ஒருவர் பர்தா உடை அணிந்து கொண்டும் தலையில் ஹெல்மெட் மாட்டிக்கொண்டும் ஏடிஎம்யின் வெளியில் நின்று கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று எண்ணி அவரிடம் சென்று விசாரித்துள்ளனர்.அப்போது அந்த பெண்,ஆண் குரலில் பதிலளிப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.
மேலும் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அறிந்த நபர் ஓட்டம் பிடித்துள்ளார்.அப்போது அவரை விரட்டி பிடித்த காவல்துறையினர்,பர்தா அணிந்திருந்தது வேளச்சேரியில் வெல்டிங் கடை நடத்தி வரும் ராஜ்குமார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரை விசாரித்த காவல்துறையினருக்கு,அவரின் வெல்டிங் கடையில் போதிய வருமானம் வரவில்லை என்றும் ஆடம்பரமாக வாழ நினைத்து கடன் வாங்கியுள்ளார் என்றும் கடன் தொல்லை தாங்க முடியாமல் ஏடிஎம்ஐ கொள்ளையடிக்க முயன்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.