சேலத்தில் தனது சகோதரியை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு காரில் வேகமாக சென்ற இளைஞர் பல சாலை தடுப்புகளை இடித்து தள்ளியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர். இவர் ஒரு கட்டிட தொழிலாளர். இவரின் சகோதரிக்கு கொரோனா பாதிப்பு காரணமாக திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரியை அழைத்துக்கொண்டு அவரது பலேனோ காரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது, சகோதரியை அடிக்கடி கவனித்து கொண்டு காரை ஓட்டிய இவர், சற்றும் எதிர்பாராமல் சாலை ஓர கூம்பு வடிவ தடுப்புகள் மீது ஏற்றியுள்ளார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் பல இரும்பு சாலை தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டார்.
அதனால், காரை நிறுத்தி காவல்துறையினரிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அனுமதி பெற்று சென்றுள்ளார். சகோதரியை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, மீண்டும் காவல் துறையினரிடம் உண்மையை விளக்கி கூறியுள்ளார். பின்னர், இவரை அஸ்தம்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் இவர் கூறியது உண்மை என்று தெரியவந்துள்ளது. பதற்றத்தில் நடந்த சம்பவம் என்பதால் காவல்துறையினரும் மனிதாபிமான அடிப்படையில் இவரை திருப்பியனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …