லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த வாலிபர் தற்கொலை !
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து உள்ள ஏரவலம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை மகன் கவியரசன்(22) இவர் +2 வரை படித்து உள்ளதால் அங்கு உள்ள சக்கரை ஆலையில் கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஏரவலம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து வண்டல் மணணை டிராக்டர் மூலம் எடுப்பதாகவும், அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வளர் ஆகியோர் மண் எடுபவர்களிடம் இருந்து லஞ்சமாக ரூ.5000 வாங்கியதாகவும் ,அதை கவியரசன் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
வீடியோ எடுப்பதை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வளர் ஆகிய இருவரும் கவியரசனிடம் இருந்து செல்போனை பிடுங்கி ஆபாசமாக திட்டி கொலை செய்து விடுவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கவியரசன்மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவ இடத்திற்குவந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.மேலும் கவியரசன் தந்தை ஏழுமலைகொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.