டெஸ்ட் ட்ரைவ் செல்வதாக கூறி பைக்கை திருடிய இளைஞர்..!

சென்னையில் பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மடிப்பாக்கத்தில் உள்ள ஜான் என்பவர் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான் கடைக்கு ஒரு நபர் ஆட்டோவில் வந்து உள்ளார். ஆட்டோவில் அந்த நபர் உங்கள் கடையை இணையதளத்தின் மூலமாக பார்த்து பைக் வாங்க வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் ஜானுக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் தனது சகோதரர் எட்வினிடம் கடையை விட்டு விட்டு சென்று உள்ளார். அந்த நபர் 30 ஆயிரத்துக்கு பைக் வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே எட்வினிடம் அந்த நபர் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எட்வின் அவரை நம்பி பைக்கை கொடுத்துள்ளார். டெஸ்ட் டிரைவ் பைக் எடுத்து சென்று நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை இதனால் எட்வின் உடனே அவருக்கு போன் செய்தபோது அவர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீஸார் அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அந்த நபர் இறங்கிய ஆட்டோ டிரைவரையும் , சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.