நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்த கொலை தொடர்பாக ஒருவரைப் பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.