வாகனத்தை பறிமுதல் செய்ததால்… இளைஞர் தீக்குளிப்பு..!

திருப்பூர் மாவட்டத்தில் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் முகிலன், இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தத நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்துகொண்டிருந்தனர், அப்பொழுது அங்கு வந்த முகிலன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார், இதனை பார்த்த காவல் துறையினர் வண்டியை மடக்கி பிடித்து உரிய ஆவணங்கள் இல்லாததால் வண்டியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த வண்டியை காவல்துறையினர் எதிரில் உள்ள மைதானத்தில் நிறுத்தியுள்ளனர், இதனால் கோபமடைந்த முகிலன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து மண்ணெண்ணெய் எடுத்துகொண்டு வேகமாக வந்து நாடு ரோட்டில் நின்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளார், இதனை பார்த்த போலீசார் மற்றும் மக்கள் வேகமாக போர்வை எடுத்து கொண்டு தீயை அணைத்துள்ளனர், மேலும் முகிலன் உடலில் 90% தீகாயம் ஏற்பட்டுள்ளது, இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட 5 காவலர்களையும் விசாரணை முடியும் வரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து உள்ளதாகவும், முகிலனுக்கு தேவையான அணைத்து உதவியும் செய்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இளைஞர் தீக்குளிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க விசாரணை அதிகாரியாக மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி. பிரவீன் குமார் நியமிக்கப்பப்பட்டுள்ளார். மேலும் அதில் பதிவான சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் 5 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025