கல்லூரி மாணவி கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது…!
கோவை பேரூரில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் ரதீஸ் என்ற இளைஞர் கைது.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவர் அங்கு பால் வியாபாரம் செய்து வருகிறார் இவருடைய மகள் ஐஸ்வர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் , இந்த நிலையில் அதே பகுதியில் இவர்களின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ரித்தீஷ், இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் ஐஸ்வர்யா முதலில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது , இவர்கள் காதலித்து இரு வீட்டாருக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இருவரையும் அழைத்து பேசியுள்ளனர் அப்பொழுது மகேஸ்வரி ரித்தீஷ் உடன் பேசுவதை குறைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 8.30 மணி அளவில் ஐஸ்வர்யா வீட்டிற்கு ரித்தீஷ் சென்று காதலிக்குமாறு சிறிது நேரம் வற்புறுத்தி கூறியுள்ளார், இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார் இதனால் கோபமடைந்த காதலன் ரித்தீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யா வயிற்றில் ஐந்து முறை குத்தியுள்ளார் குத்திய உடன் வலி தாங்காமல் கத்திய ஐஸ்வர்யாவின் குரலை கேட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா தந்தை சக்தி வேலையும் ரித்தீஷ் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி ரித்தீஷை தேடி வந்த நிலையில் தற்பொழுது
பச்சாப்பாளையம் வனப்பகுதியில் பதுங்கி ரித்தீஷை கைது செய்தனர் மேலும் கைதான இளைஞரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.