தூத்துக்குடி அருகே…புதுமண தம்பதி வீட்டில் திருடிய வாலிபர் கைது.!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் அருகே புதுமண தம்பதி வீட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலையன் கரிசல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் ஜெயராஜ் வயது (67) இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் , மேலும் இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார், இவரது உறவினரான துரைராஜ் மகன் ஐசக் நியூட்டன் வயது 29 இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 15நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, இதயைடுத்து புதுமண தம்பதியர் குலையன் கரிசலில் உள்ள கணேசன் ஜெபராஜூக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஐசக் நியூட்டன் தனது தொழில் விஷயமாக வெளிய சென்றதால் அவருடைய மனைவி அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு தூங்க சென்றார், இதை பார்த்த அந்த திருடன் இரவு ஐசக் நியூட்டன் வீட்டில் இறங்கி 2 உண்டியல் மற்றும் 5,000ரூபாய் மற்றும் வெள்ளி கொலுசு, மோதிரம் போன்ற பொருட்களை எடுத்துச்சென்றார். 

மேலும் காலை ஐசக் நியூட்டன் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வரும் பொழுது நகைகள் மற்றும் பணம் திருடுபோனதை அறிந்த ஐசக் நியூட்டன் அதிர்ந்து போனார், இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி மற்றும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

மேலும் தடயவியல் நிபுணரை வரழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர, மேலும் போலீசார் வழக்கு பதிந்து அந்த மர்ம நபரை தேடினர், அப்போது அந்த பகுதியிலிலுள்ள பால்பாண்டி மகன் பாலமுருகன் வயது 35 திருடியது என்று தெரியவந்துள்ளது, போலீசார் அவரை விசாரணை செய்த பொழுது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார், அதன் பிறகு திருடிய 2 உண்டியல் மற்றும் 5,000ரூபாய் மற்றும் வெள்ளி கொலுசு, மோதிரம் அனைத்தையும் மீட்டனர். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்