இளைஞரை கடத்தி கொலை செய்த கந்துவட்டி கும்பல்..!

Published by
Surya
  • பேயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்த இடத்தில் அவருக்கு பணம் கொடுக்காத காரணத்தினால், வட்டியை கட்ட முடியாமல் தவித்தார்.
  • அவரை அடைத்துவைத்து, வட்டிக்கு மேல் வட்டி போட்டு வாங்கிய பணத்திற்கு மூன்று மடங்கு அதிகமாய் வட்டி போட்டு, அவரை தாக்கியதால் அவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர் மறைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர், ஆழ்வார்திருநகரியில் உள்ள வட்டித் தொழில் செய்யும் கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கினார்.

இவர் பெயின்டிங் காண்ட்ராக்ட் எடுத்த இடத்தில் அவருக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வட்டி கட்டமுடியாமல் தவித்து வந்தார். சாகுல்ஹமீதிடம் பலமுறை கேட்டும் வட்டி பணத்தை கேட்டாததால், ஆத்திரத்தில் கண்ணன், சாகுல் ஹமீதை தனது ஆதரவாளர்களான 6 பேருடன் சேர்ந்து கடந்த 17ம் தேதி காரில் கடத்திச் சென்றார்.

அங்கு அவரை அடைத்துவைத்து, வட்டிக்கு மேல் வட்டி போட்டு வாங்கிய பணத்திற்கு மூன்று மடங்கு அதிகமாய் பணம் கேட்டு அவரை கடுமையாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வேற்று பேப்பரில் விறல் ரேகையை வாங்கி கொண்டு சென்றனர்.

பலத்த காயம் அடைந்த அவரை வீட்டில் உள்ளவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். ஆந்த 6 நபர்களில் 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கண்ணன் உட்பட மீதம் உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.

அந்த கும்பலின் தலைவரான கண்ணனை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Published by
Surya

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

3 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

5 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

6 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

7 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

8 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

8 hours ago