”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

தருமபுரியில் நாதக மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் இவ்வாறு சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிருக்கிறார்.

seeman

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தர்மபுரியில் நேற்று பேசிய சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என வினா எழுப்பியிருந்தார்.

ஆனால், தற்போது அவர் நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் சீமான் வீட்டு காவலாளிக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் சம்மனை ஒட்டுவதற்கு வசதியாக, வீட்டு முன் சீமான் தரப்பில் தனி போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தருமபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் குண்டுகட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க’ என்று நாதக மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் சர்ச்சைப் பேசிருக்கிறார்.

மேலும் சம்மன் ஒட்டியது குறித்து பேசிய சீமான், “நான் ஓசூரில் இருப்பதை தெரிந்துக்கொண்டே, என் வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளனர். ஏன் சம்மனை எனது ஈமெயிலுக்கு அனுப்பியிருக்கலாமே..? விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்?

சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா? சம்மனை கதவுல ஏன் ஒட்டிட்டு போனீங்க.. கதவா வந்து விளக்கம் தர போகுது.? உங்க நோக்கம் தான் என்ன.? இது என்ன மாதிரி அணுகுமுறை? என்று சீமான் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

சம்மனை பூஜை அறையிலா மாட்ட முடியும்?

நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், 3 நாளில் வழக்கை முடிக்க போலீசார் விரும்புவது ஏன்? சம்மன் ஒட்டுவதோடு போலீசாரின் வேலை முடிந்து விட்டது. சம்மனை நாங்கள் கிழித்தால் அவர்களுக்கு என்ன? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும் என்று கூறியுள்ளார்.

தனித்து நின்று என்னை எதிர்க்க முடியுமா?

234 தொகுதிகளிலும் தனித்து நின்று காசு கொடுக்காமல் திமுகவால் வெல்ல முடியுமா? என்னைப் போன்று தனித்து நின்று என்னை எதிர்க்க ஸ்டாலின் தயாரா? கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம். தமிழா? திராவிடமா? என்பதை 2026 தேர்தலில் தனித்து நின்று வென்று காட்டுவோம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்