உங்கள் நலனே என்னுடைய நலன் – தனது பிறந்தநாளில் கனிமொழி ட்வீட்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கனிமொழி எம்.பி ட்வீட்.
நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி அவர்கள் இன்று தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், திமுகவின் முக்கிய பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது பிறந்த நாளான இன்று கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்,’இன்று என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! கொரோனா நோயின் பரவல் அதிகமாகி வருவதைக் கருத்தில் கொண்டு நேரில் வாழ்த்த வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நலனே என்னுடைய நலன்.’ என பதிவிட்டுள்ளார்.
இன்று என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! கொரோனா நோயின் பரவல் அதிகமாகி வருவதைக் கருத்தில் கொண்டு நேரில் வாழ்த்த வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நலனே என்னுடைய நலன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 5, 2022