உங்களது முதல் கையெழுத்து மதுவிலக்குக்கானதாக தான் இருக்க வேண்டும்…! ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்த பெண்…!

Published by
லீனா

நீங்கள் பிரதமர் ஆகி இடும் முதல் கையெழுத்து மது விலக்குக்காக தான் இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார். 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இன்று இரண்டாவது கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தில். ஈடுபட்டார். இதனையடுத்து, தூத்துக்குடியில் வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின், உப்பள தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது உப்பள தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம் மனம்திறந்து பேசி, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் ராகுல் காந்தியிடம், உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், வருடத்துக்கு 7 மாதம் மட்டுமே வேலை இருக்கிறது எனவே மீதமுள்ள மாதங்களில் வருவாய்க்கு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும், தூத்துக்குடியில், மதுபான கடைகள் அதிகமாக காணப்படுவதால் சம்பாதிக்கும் ஆண்கள் பணத்தை அதில் தொலைத்து விடுவதாகவும், நீங்கள் பிரதமர் ஆகி இடும் முதல் கையெழுத்து மது விலக்குக்காக தான் இருக்கவேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் ஒரு பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

பின் உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி, பாஜக ஆட்சியில் ஏழைகள் பரம ஏழைகளாவது, பணக்காரர்கள் பெரும் பணக்காரராவதும் தான் நடக்கிறது என்றும், உப்பள தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும்  ‘நியாய்’ என்ற திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்படும் என்றும்  உறுதியளித்துள்ளார்.

Published by
லீனா
Tags: #Tasmacrahul

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!

சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!

ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

3 minutes ago

அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை :  அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…

49 minutes ago

காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!

சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…

51 minutes ago

சாதனை கனவாக போனது… வெறும் 1 ரன்னில் அவுட்! வந்த வேகத்தில் திரும்பிய ரோஹித் ஷர்மா.!

குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…

2 hours ago

“பணக் கொழுப்பு”..விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் சொன்ன பதில்!

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…

2 hours ago

INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!

அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…

3 hours ago