உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது – ஆளுநருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்..!
வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக சுப.உதயகுமார் அவதூறு வழக்கு நோட்டீஸ்
நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, வெளிநாட்டு பணம்,ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம் என பல்வேறு விஷயங்கள் சர்ச்சையான கருத்துக்களை பேசியிருந்தார்.
நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கும் வெளிநாட்டு நிதியே காரணம் என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநருக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ்
இந்த நிலையில், கூடங்குளம் போராட்டம் தொடர்பான உண்மைக்குப் புறம்பான ஆளுநரின் பேச்சுக்கெதிராக மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாயிலாக சுப.உதயகுமார் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதில், கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதி பெறப்பட்டதாக தாங்கள் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. எனது மரியாதைக்கு ஊறு விளைவிக்கவே தவறான தகவலை பேசியுள்ளீர்கள். உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்குப் புறம்பானது; அது அவதூறின் கீழ் வருகிறது. நீங்கள் தெரிவித்த தவறான கருத்துக்களை திருத்த வேண்டும் இல்லையெனில் சட்டத் தீர்வுகளை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.