தீயனைப்பு துறையை எதிர்பார்க்காமல் எகிறிய இளைஞர்கள்.. குழியில் விழுந்த குழந்தையை 15 நிமிடத்தில் மீட்டு சாதனை.. யாருக்கும் தெரியாத சம்பவம்..

Default Image
  • பள்ளத்தில் சிக்கிய நான்கு வயது குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர்கள்.
  • துரிதமாக அருகில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்ட பதைபதைக்கும் சம்பவம்.

விழுப்புரம் மாவட்டம்  சின்னபாபு சமுத்திரம் என்ற  கிராமத்தில் இந்திரா காந்தி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த  திட்டத்தில் சரோஜா என்ற பயனாளிக்கும்  வீடு கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்படும் வீடுக்கான கட்டுமானப் பணிக்காக  சுமார் 7 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று  பொதுமக்கள் தெரிவிக்கவே  அந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு  முன் அப்பகுதியில் விளையாட்டிக் கொண்டிருந்த அதே கிராமத்ததைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 4 வயது மகள் கோபிணி, இவர் அந்த பள்ளத்தில் தவறி 7 அடி குழிக்குள் விழுந்துள்ளார். இந்நிலையில் அந்த  குழந்தையின் அழுகை சத்தம்  கேட்கவே , அந்த பகுதியில் இருந்தவர்கள் குழந்தை குழிக்குள் தறவி விழுந்ததை பார்த்தனர். உடனே, அந்த குழந்தையின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அந்த  குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Image result for விழுப்புரம் 4 வயது சிறுமி மீட்பு

ஆனால் குழி சற்று குறுகளாக இருந்ததால், உள்ளே இறங்கி மீட்பது என்படு மிகவும் சிரமமாக இருக்கவே, சிறுமி சிக்கிய குழிக்கு அருகிலேயே மற்றொரு குழி வெட்டி சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றனர். குழந்தை விழுந்த உடனே துரிதமாக  செயல்பட்ட அந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில், மீட்புப் பணியின் போது கடைசி நிமிடக் கட்சிகளை மட்டும்  அப்பகுதியில் இருந்த இளைஞர் ஒருவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் வீடியோவாக நேற்று மாலை வெளியிட்டார். இந்த மனதை பதைபதைக்க வைக்கும் அந்த பரபரப்பான கடைசி நிமிடக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெகுவேகமாக பரவி வருகிறது.

Image result for விழுப்புரம் 4 வயது சிறுமி மீட்பு

இது குறித்து அந்த மாவட்ட காவல்துறையில் விசாரித்தபோது, குழிக்குள் விழுந்த சிறுமியை அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்களே விரைவாக செயல்பட்டு மீட்டு விட்டதால், காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. எனினும்  இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அந்த இளைஞர்களின் இந்த தீர செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்