வட மாநிலத்தை போல நாகை அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞருக்கு கத்திக்குத்து

Default Image

வட மாநிலத்தில் மாட்டு இறைச்சி  சாப்பிடவர்கள் மீது அங்கு உள்ள இந்து மக்கள் கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்த இது போன்ற சம்பவங்கள் அங்கு அரேங்கேறி வருகிறது.

இந்தநிலையில்  வட மாநிலத்தை போல  நாகப்பட்டினத்தில்  மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞர்  தாக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது பைசான் என்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.இவர் தனது முகநூல்  பக்கத்தில்  மாட்டு இறைச்சி சாப்பிட்டதை பதிவிட்டிருந்தார்.

இவரது பதிவை பார்த்த அதே பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் முகமதுவை கத்தியால்  தாக்கியுள்ளனர்.இதனால் முகமது படுகாயம் அடைந்தார்.இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த அவரை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தான் வந்த தாக்குதலை நடத்தியதாக முகமது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.போலீசாரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்களை தீவிரமாக தேடி வந்தார்கள். இதில்  மோகன்குமார்,தினேஷ்குமார், கணேஷ்குமார்,அகஸ்தியன் ஆகியோரை கைது செய்தது போலீசார்.மேலும்  பலரை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்