பரபரப்பு – தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை!

தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்கு தாம்பரம் நுழைவு வாயில் அருகே மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை.
தனியார் கல்லூரியில் படித்து வரும் 22 வயதான ஸ்வேதா என்பவர் அவரின் ஆன் நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இருவரும் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்ததும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் இல்லாமல் சுவேதா உயிரிழந்தார்.
அதேபோல், தானும் கழுத்தை அறுத்துக்கொண்ட ராமச்சந்திரன் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் கல்லூரி மாணவியை காதலன் கத்தியால் குத்தி கொலை, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சேலையூர் சரக உதவி ஆணையாளர் முருகேசன் தலைமையில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025