சாப்பிட்டதுக்கு காசு கேட்டதால் கடை ஊழியரை சரமாரி அடித்த இளைஞர்கள்.!

- மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் சில இளைஞர்கள் பப்ஸ் சாப்புட்டுள்ளனர். அதற்கு காசு கேட்ட கடை ஊழியரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் கிறிஸ்டி மோசே என்பவர் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். அந்த பேக்கரிக்கு வந்த சில இளைஞர்கள் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களிடம் காசு கேட்டதால் கோபமடைந்த அந்த இளைஞர்கள் பேக்கரி ஊழியரை சரமாரியாக அடித்துள்ளனர். அதுவும் பொதுமக்கள் முன்னிலையில், பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பேக்கரி ஊழியர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025