தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நடராஜபுரம் 9-வது தெருவை சார்ந்தவர் பாண்டி. இவர் நியாய விலைக்கடை ஊழியராக இருந்த இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.
பாண்டிக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி மகேஸ்வரி இவர் 16 வருடத்திற்கு முன் இறந்து உள்ளார்.பின்னர் மகேஸ்வரியின் சகோதரியான கோகிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இறந்த மகேஸ்வருக்கு கவிதா என்ற மகளும் , மணிகண்டன் என்ற மகன் உள்ளனர்.
கோகிலாவிற்கு மகேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார்.கவிதாவிற்கு திருமணம் முடிந்து விட்டது.திருமணம் செய்யாமல் இருக்கும் மணிகண்டன் அடிக்கடி தகராறு செய்து விட்டு சிறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
மணிகண்டன் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாண்டி இறந்ததற்காக பணிக்கொடை பணம் ரூ.2,00,000அரசு சார்பில் இருந்து வந்து உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் சிறை சென்ற மணிகண்டன் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன் ,கோகிலாவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து 2 நாள்களுக்கு முன் காலை கன்னியாகுமரிக்கு கோகிலாவின் மகன் பள்ளி மூலம் சுற்றுலா சென்று உள்ளார்.சுற்றுலா சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மகேந்திரன் வீட்டில் வந்து பார்த்தபோது கோகிலா ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அருகில் இருந்த உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கோகிலாவின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் கட்டையால் மணிகண்டன் அடித்து கொன்றது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து உள்ளனர்.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…