கள்ளக்குறிச்சியில் ஒரே மாதத்தில் இரண்டு காதல் திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருவாங்கூர் எனும் கிராமத்தில் 22 வயதுடைய பூவரசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள நர்மதா என்னும் பெண்ணை சில மாதங்களாக காதலித்து, நெருங்கி பழகியதால் நர்மதா கர்ப்பமாகியுள்ளார். எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனை வற்புறுத்தியுள்ளார். இதன் விளைவாக பூவரசன் தலைமறைவாகியுள்ள நிலையில் இது குறித்து காவல்துறையில் நர்மதா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதனை கண்டறிந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருமணமாகி சில நாட்களிலேயே பூவரசன் செல்போனுக்கு தீபிகா எனும் கல்லூரி மாணவி ஒருவர் காதலி என கூறி அழைத்துள்ளார். அப்போது தான் பூவரசன் தன்னையும் காதலித்து, தீபிகா எனும் பெண்ணையும் காதலிக்கிறார் என்பதுதெரியவந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நர்மதா பூவரசனிடம் விசாரிப்பதற்குள் பூவரசன் தீபிகாவை திருமணம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தீபிகாவுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இரண்டு பெண்களையும் ஒரே மாதத்தில் ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பூவரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…