17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கைது.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
17வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிக்கு அருகேயுள்ள சிரிக்கோட்டையை சேர்ந்தவர் 27வயதான பழனிசாமி. இவர் தனது உறவினர் மகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் சிறுமி காணாமல் போயுள்ளார்.
உடனடியாக அவரது பெற்றோர்கள் காரைக்குடியில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசாரும் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். அதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றவர் பழனிச்சாமி என்று தெரிய வந்ததை அடுத்து, காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!
February 12, 2025![Sunita Williams](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sunita-Williams.webp)
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025![Sri Lanka vs Australia 1st ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sri-Lanka-vs-Australia-1st-ODI.webp)
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025![Seeman - Sampathkumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seeman-Sampathkumar.webp)