திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்வயது பெண்! தாயாரின் செயலால் புதுப்பெண் எடுத்த விபரீதமான செயல்!

Default Image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் மோகனா – சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு 21 வயதில், ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், மோகனாவின் கணவரான சந்திரன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக காலமானார்.
இதனையடுத்து மோகனா குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில், அவரது மகளான சத்யாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களது திருமணத்திற்காக, மோகனா கடன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து, சத்யா தனது தாயாரான மோகனாவை, ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில், மீண்டும் ஏன் கடன் வாங்குகிறீர்கள் என திட்டியுள்ளார். இதனையடுத்து மனமுடைந்து இருந்த சத்யாவை காணமல் போக, அவரது தாயார் சத்யாவை தேடியுள்ளார். வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றில் சத்யா விழுந்து கிடந்ததை கண்டு, மோகனா கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war