கோவையில் அதிர்ச்சி..! கட்சிக்கொடி விழுந்து லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்..!

கோவை சிங்காநல்லூரை சார்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.அனுராதா வழக்கம் போல நேற்று காலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
அனுராதா கோல்டுவின்ஸ் பகுதியில் செல்லும் போது கட்சி கொடி கம்பம் விழுந்து உள்ளது. இதனால் அனுராதா பிரேக் அடித்து உள்ளார்.அப்போது நிலை தடுமாறி அனுராதா சாலையில் கீழே வீழ்ந்து உள்ளார்.
அதே வழியாக வந்த லாரி ஓன்று அனுராதா காலில் ஏறியதாக கூறப்படுகிறது.உடனே அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காலில் அறுவை சிகிக்சை நடைபெற்று உள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை கட்சி பிரமுகர் வீட்டு திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமணத்திற்காக அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு ,கொடி கம்பம் வைக்கப்பட்டு உள்ளது.அந்த கொடிக்கம்பம் அதிமுக கட்சி உடையது எனவும், கொடிக்கம்பம் மோதியதால் தான் விபத்து நடந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025