குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள தலக்குளம் என்ற பகுதியில் ஒரு பேனர் கட்டப்பட்டுள்ளது. அந்த பேனரை, அந்த வழியாக செல்லும் மக்கள் அனைவரும் பார்த்து செல்கின்றனர். அந்த பகுதியில் திருமணமாகாத வாலிபர்கள் இணைந்து தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி பேனர் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த பேனரில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமணவரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! நன்றி! நன்றி! என குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்களது நற்பணி தொடருமானால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திருமண வரங்களை தடுப்பவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு வாகன வசதி செய்தி தரப்படும் என்றும், இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தன. இந்த பேனர் குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த…
சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…
சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…
சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…