நீங்கள் உயர்வான வாழ்க்கை வாழ பாடுபடுவேன்…! ஏமாற்றமடைந்த நடிகை கௌதமி ட்வீட்…!

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பிய கௌதமி ஏமாற்றமடைந்த நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் தான் போட்டியிட விரும்பிய ராஜாப்பாளையம் தொகுதியில் தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், இந்த தொகுதியில் கௌதமி தனது தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆனால் ராஜபாளையம் தொகுதி அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் கௌதமி ஏமாற்றம் அடைந்த கௌதமி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக, உங்களில் ஒருவராக, கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தீர்கள். நீங்கள் எனக்கு காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டுபட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ, அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.’ என்று பதிவிட்டுள்ளார்.
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.
— Gautami Tadimalla (@gautamitads) March 10, 2021
உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.
என்றும் அன்புடன்
உங்கள் கௌதமி#Gautami #கௌதமி #Rajapalayam #இராஜபாளையம்— Gautami Tadimalla (@gautamitads) March 10, 2021