பத்ம விருதுகள் பெறவுள்ள நீங்கள், இம்மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்- முதல்வர் ஸ்டாலின்.!
தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற உள்ளவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74ஆவது குடியரசு தினவிழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்தவருடம் தமிழ்நாட்டிலிருந்து பத்மபூஷன் விருது பெறவுள்ள வாணி ஜெயராம் மற்றும் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் தந்து நெஞ்சார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார்.
நாட்டின் உயரிய விருது பெறவுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நீங்கள் உங்கள் துறைகளில் சாதித்து, இம்மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என முதலவர் ஸ்டாலின் தெரிவித்தார்.