நீங்கள் வேலுமணி அனுப்பிய ஆள், வெளிய போங்க – கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு.!
திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஒரு பெண்ணின் கேள்வியால் கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
கோவை, தேவராயபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதில், பெண் ஒருவர் பேச முன்வந்தபோது, நீங்கள் எந்த ஊர் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பெண் ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என ஸ்டாலினிடம் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட திமுக நிர்வாகிகள் உடனே அந்தப் பெண்ணை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். பின்னர் ஆத்திரமடைந்த ஸ்டாலின், அந்த பெண்ணிடம், நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள், தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றீர்கள், வெளியேறுங்கள் என்று கூறியதுடன் என் கிட்ட கொடுத்த பட்டியலில் உங்க பெயர் இல்லை? என கூறியுள்ளார். காவல்துறை அந்த பெண்ணை இழுத்து சென்றது கோபமடைந்த பெண் திமுக ஒழிக என்று கோஷமிட்ட வெளியேறினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து, திமுகவினர் நடத்தும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காகவே, அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆட்களை அனுப்பியதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.
ஸ்டாலின் கூட்டத்தில் அதிமுக பெண் pic.twitter.com/cYz9N9cKY7
— Senthilmurugan R (@SenthilRmurugan) January 2, 2021