நீங்கள் தலைவர் என்று வேடமிட்டு நிஜத்தில் நடிக்கிறீர்கள் – குஷ்பு பதிலடி

Default Image

நீங்கள் தலைவர் என்று வேடமிட்டு நிஜத்தில் நடிக்கிறீர்கள் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார். 

நேற்று பாஜகவில் இணைந்த குஷ்பு இன்று தமிழக பாஜகவின் தலைமை அலுவகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலர வேண்டும் என்ற உறுதியோடு பாஜகவில் இணைந்துள்ளேன் .நான் இன்னமும் பெரியாரிஸ்ட் தான்.பெண்களுக்காக குரல் கொடுத்தார் பெரியார்.நான் நடிகை, படத்தில் வெளிப்படையாக நடிக்கிறேன்.நீங்கள் தலைவர் என்று வேடமிட்டு நிஜத்தில் நடிக்கிறீர்கள் என்று பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினரை விட மேல் என நினைக்கிறார்கள். அதனால்தான் எனது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கின்றார்கள். மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் இணைந்துள்ளேன் . பதவிக்காகவோ, பேரம் பேசியோ சேரவில்லை.பாஜக -வின் நல்ல திட்டங்களுக்கு காங்கிரஸில் இருக்கும்போதே வரவேற்பு தெரிவித்துள்ளேன். காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களை தான் பாஜக செயல்படுத்துகிறது.இரண்டு ருப்பார் வாங்கிக்கொண்டு என்னை பற்றிய வதந்தி ட்வீட் போட்டது காங்கிரஸ் கட்சியினர்தான்.பாஜகவில் சேர்வதற்கு எனது கணவர் காரணமில்லை.நான் அரசியலில் 10 வருடம் இருந்துள்ளேன்.எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது எனது கணவரை பார்த்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .

குஷ்புவை காங்கிரஸ் தொண்டர்கள் நடிகையாகத்தான் பார்த்தார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்