இனிமேல் வைகோவுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் செலுத்த வேண்டும்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொடர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது, இனிமேல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு யாரும் சால்வை அணிவிக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக, விரும்புவோர் கட்சிக்கு நிதி வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், வைகோவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள், குறைந்தபட்ச நிதியாக, ரூ.100 செலுத்த வேண்டும் என்றும், கட்சியில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாத நிர்வாகிகள் அனைவரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறும் தெரிவிதித்துள்ளனர்.