அலட்சியம் காட்டாமல் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தடுக்க வேண்டும் – முக ஸ்டாலின்

Default Image

கொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுக்க வேண்டும்.

கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கும் அவதிக்கும் ஆளாக்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள், அங்குள்ள மக்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன. பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள். 

மேலும், தமிழக அரசு, கொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளிகளால் ஏற்படும் இழப்பும் வந்து தம் தலையில் விழுந்துவிடுமோ என்ற பீதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என முக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்