நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் – மு.க.அழகிரி
நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள்
இன்னும் சில மாதங்களில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அணைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து, மதுரையில், மு.க.அழகிரி இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம், மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய அவர், நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால், ஒருவருக்கும் நன்றி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.