மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை – ஜெயக்குமார்
அதிமுக – பாஜக கூட்டணியை மோடியும், அமித்ஷாவும் உறுதி செய்துவிட்டனர் என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை மோடியும், அமித்ஷாவும் உறுதி செய்துவிட்டனர், மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.
சமூக நீதி பற்றி பேச அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது.
சமூக நீதியை நிலைநாட்டியது அதிமுகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தான். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேலி சித்திரமாக தான் விடியாத அரசும், மு.க.ஸ்டாலினும் உள்ளார். திமுக கட்டுப்பாடு இல்லாத கட்சியாக உள்ளது. கட்சியும் கட்டுப்பாடு இல்லை, ஆட்சியிலும் கட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.