அரசு சொல்வதையெல்லாம் கேட்க முடியாது, கூடுதல் விலைக்கு தான் மது விற்பேன் என அடம்பிடித்த மதுக்கடை ஊழியர்கள் பணியிடைநீக்கம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பானத்தை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ரசீது வழங்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மதுபான கடைகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்குட்பட்ட திருவரங்கம் டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை மதுபான விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு மது வாங்கிய மதப்பிரியர் ஒருவன் அரசு நிர்ணயித்த விலை தான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
அப்போது அங்கு பணிபுரிந்த டாஸ்மாக் கடை பணியாளர் அவரிடம் அடாவடித்தனமாக பேசியுள்ளார். அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் சக ஊழியரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தொடர்பாக வீடியோ ஆதாரம் வெளியானதை அடுத்து, டாஸ்மாக் ஊழியர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் டாஸ்மாக் மேலாளர் கூறுகையில், அரசின் உத்தரவை பின்பற்றாத டாஸ்மாக் ஊழியர்கள் சோலைராஜ் ராமகிருஷ்ணன் ஆகியோர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…