மாஸ்க் இல்லனா ஒன்னும் வாங்க முடியாது! சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

Published by
லீனா

சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்.

தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

ரேஷன் கடை

  • 200 கார்டுகளை மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும்.
  • கடைகளில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை செய்ய வேண்டும்.
  • டோக்கனில் குறிப்பிட்டு உள்ள நாள், நேரத்தில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.
  • கடைக்கு வரும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  • முகக்கவசம் அணியாத பட்சத்தில்  வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்

  • கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலையில் உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • அனைத்து பணியாளர்களும் முகக்கவசம், கையுறை, முகக்கவச கண்ணாடி அணிய வேண்டும்.
  • தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தி தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வங்கிகள்

  • வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • டோக்கன் முறை, சரியாக பின்பற்றப் பட வேண்டும்.ஒரு நேரத்தில் வங்கியினுள்  5 வாடிக்கையாளர்களுக்கு மேல் இருக்க கூடாது.
  • பாஸ் புக் பதிவு, குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
  • ஏடிஎம் மையங்களில் தேவையான பணத்தை நிரப்பி, மக்கள் வங்கிகளுக்கு கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.  ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை வழங்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க கூடாது.
Published by
லீனா

Recent Posts

“உங்கள் காலடி மண்ணை தொட்டு.,” தவெக தலைவர் விஜயின் ஆவேசமான முழு பேச்சு இதோ….

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…

9 minutes ago

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை : எடப்பாடி ஏன் அவசரப்படுகிறார்? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…

17 minutes ago

அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சென்னை :  பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

39 minutes ago

பரந்தூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்! உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்…

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…

1 hour ago

பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்! வாங்கிய பரிசுகள் என்னென்ன தெரியுமா?

சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…

2 hours ago

காசா எல்லையில் ஆனந்த கண்ணீர்.. சுதந்திர காற்றை சுவாசிக்கும் பாலஸ்தீன மக்கள்!

காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…

2 hours ago