நீட் தேர்வுக்கு 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே 80% தேர்த்தி பெறலாம்.! அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.!
- தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடையலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற 2-வது நாளான தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் மற்றும் தமிழக பட்ஜெட்டை குறித்து ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் கேள்விகள் எழுப்பி காரசாரமாக விவாதித்தனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர்,தமிழகத்தில் நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் தான் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். பின்னர் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் 80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடையலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.