மாணவர்கள் கவனத்திற்கு.! இந்த தேதிகளில் 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட் பெறலாம்.!
தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி +2 பொதுத்தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் ஜூலை மாதம் 27- ஆம் தேதி அந்த தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
மாணவர்கள் தேர்வு எழுத சொந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பள்ளிகளிலோ பதிவிறக்கம் செய்து 13 முதல் 17-ஆம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.