மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.
மதுரை மீனாட்சி கோவிலில் சைவ பயிற்சி சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இலவச உணவு, உடை, உறைவிடத்துடன், மாதம் ரூ.3000 உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு இந்து சமய அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் அறநிலையத்துறை இந்து சமய அறநிலையத்துறையின் ரூபாய் 1 கோடியே 50 இலட்சம் செலவில் ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சைவ ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து சைவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். பயிற்சி பெறும் பயில் மாணவர்கள் பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு. சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு இப்பயிற்சியில் ரூ.3,000/- உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் இணையதளத்தில் www.maduraimeenakshi.org பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சைவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் கேட்டுக் கொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…