‘நீங்கள் தான் உண்மையான சாம்பியன்’- வினேஷ் போகத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு..!

MK Stalin-Vinesh Phogat

சென்னை : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணிக்காக 4-வது தங்கம் உறுதியாக கிடைக்கும் என நேற்றைய நாள் முதலே எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை பொழுதில் இறுதி போட்டிக்கு முன் உடல் தகுதியில் 100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தால் வினேஷ் போகத்தை சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்துள்ளது.

இதன் காரணமாக ஒட்டு மொத்த இந்தியர்களின் இதயங்களும் நொறுங்கி போனதென்றே கூறலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் பல கட்சி தலைவர்கள், பல முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். மேலும், இந்தியா முழுவதும் அவருக்கு அதரவு பெருகி கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் வினேஷ் போகத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், “வினேஷ், நீங்கள் தான் உண்மையான சாம்பியன். உங்களது வேகம், வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. சில கிராம் எடை கூடுதலால் ஏற்பட்ட இந்த தகுதி நீக்கம் உங்கள் மனதையும், நீங்கள் செய்த சாதனைகளையும் உடைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

வினேஷ் போகத் பல தடைகளை தாண்டி, பல இன்னல்களை கடந்து, தொடர்ந்து 2 ஒலிம்பிக்கில் தகுதி பெறாமல்,தற்போது நடைபெற்ற இந்த மல்யுத்த போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் கடைசி தருணம் வரை போராடினார். ஆனால், இப்படி இறுதி போட்டிக்கு வந்தும், அந்த போட்டியை தோற்றாலும் கூட வெள்ளி பதக்கதுடன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கலாம். ஆனால், இந்த தகுதி நீக்கம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஏற்று கொள்ள முடியாத வண்ணம் அமைந்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS
magizh thirumeni