தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என்று நேரம் கேட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.முதலமைச்சர் பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்றார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
அதிலும் குறிப்பாக 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். கடந்த வாரமும் தினகரனை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சி செய்தார்.ஆனால் திரை மறைவில் எங்களிடம் பேசும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேடையில் எங்களை விமர்சிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை வேடம் போடுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அமைச்சர் தங்கமணி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கட்சிகளை இணைத்துக்கொண்டு நீங்களே முதல்வர் பதவியில் இருங்கள் என்று டிடிவி தினகரன் கடந்த மாதம் அதிமுகவுக்கு தூதுவிட்டார். தினகரன் கோரிக்கையை அதிமுக ஏற்காததால் எங்கள் மீது பொய்யான பரப்புரையை செய்கின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…