‘சமநீதி குலசாமி நீங்கள்’ – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவிதை வரிகளால் புகழாரம் சூட்டிய அமைச்சர் சேகர்பாபு…!

Default Image

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து,  பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் சென்றார்.

முதல்வர் அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ வாசல்கள் தோறும் ஒளியேற்றும் நன்னாளில் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய முதல்வர் நீங்கள்!விளிம்பு நிலை மக்களின் துயருக்குக் களிம்பு பூசிய தலைவர் நீங்கள்!

அவர்கள் குறவர், இருளர் அல்ல; நம் குறிஞ்சி நில மக்களென்று கொண்டாடிய குறிஞ்சி மலர் நீங்கள். மறுக்கப்பட்டது உணவல்ல; நூற்றாண்டின் நீதி. சமநீதி குலசாமி நீங்கள்.

அதை வழங்க வந்த வீடற்று;நாடற்று கூடற்ற பறவைகளாய் இருந்தவரை. தாய்பெற்ற பிள்ளையாய் தழுவி. வசிப்பிடமும்,வாழ்வுரிமையும் வழங்கிய அன்பின் அருட்செல்வர் தாங்களே!

உலகம் காணாத உன்னதம். ஒவ்வொரு செயலும் நல்லறம். உம்மோடு இருப்பதே எம்வரம். உங்களை வணங்கவே எம்கரம்!

என்றும் உங்கள் பாதையில் அன்புடன், பி.கே.சேகர்பாபு’ என எழுதியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror