நீ இல்ல, உங்க முதலமைச்சர் எங்கேயும் கூட்டம் பேசமுடியாது – முக ஸ்டாலின் எச்சரிக்கை

Default Image

கோவை மாவட்டம் கிராம சபை கூட்டத்தில் அதிமுக அமைச்சர் வேலுமணியை கடுமையாக எச்சரித்த திமுக தலைவர் முக ஸ்டாலின்.

கோவை, தேவராயபுரம் கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களிடம் ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அதில், பெண் ஒருவர் பேச முன்வந்தபோது, நீங்கள் எந்த ஊர் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா? என ஸ்டாலினிடம் பதில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆத்திரமடைந்த ஸ்டாலின், அந்த பெண்ணிடம், நீங்கள் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள், தேவையில்லாத கேள்விகளை கேட்கின்றீர்கள், வெளியேறுங்கள் என்று கூறியதுடன் என் கிட்ட கொடுத்த பட்டியலில் உங்க பெயர் இல்லை? என கூறியுள்ளார். காவல்துறை அந்த பெண்ணை இழுத்து சென்றது கோபமடைந்த பெண் திமுக ஒழிக என்று கோஷமிட்ட வெளியேறினார்.

இதையடுத்து பேசிய ஸ்டாலின், சகோதிரி ஒருவர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர். எனக்கு நேற்றைக்கே தெரியும் இந்த கூட்டத்தை எப்படியாவது கெடுக்கணும், அப்படி என்று வேலுமணி திட்டமிட்டு, இந்த காரியத்தை செய்துள்ளார். நீ ஒரு கூட்டத்தை தடுக்க முயற்சி செய்யலாம். நீங்க நடத்துற எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம். இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் சரியாக கண்டறிந்து அவரை வெளியே அனுப்பிவிட்டோம், இதுதான் திமுக.

இந்த கூட்டத்தில் புகுந்து அதுவும் திமுக தொப்பியை வாங்கி போட்டுகொண்டு வந்துள்ளார். தைரியம் இருந்தால் அதிமுக என்று சொல்லிருக்க வேண்டும். மிஸ்டர் வேலுமணி, அமைச்சர் வேலுமணி, ஊழல் வேலுமணி அவர்களே இன்றுடன் உங்கள் கொட்டத்தை அடக்குங்கள். இதுபோன்று தொடர்ந்தால், நீ இல்ல, உங்க முதலமைச்சர் எங்கேயும் கூட்டம் பேச முடியாது. நாங்க இறங்குனா என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் அதான் மரியாதை, அவ்வளவு தான் சொல்ல முடியும் என்று கடுமையாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்