நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் மோடி, அமித்ஷா – அமைச்சர் ஏ.வ.வேலு

Default Image

மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு. 

திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாமும் தொடர்ந்து இந்தியை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது.

 திராவிட இயக்கம் என்பது தமிழை பாதுகாக்கும் ஒரு இயக்கம். இந்தி வந்தால் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை பாட முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனால் இந்திய அப்படி அல்ல 500 ஆண்டு காலம் மட்டுமே இந்திக்கு வரலாறு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்தால் திருக்குறள் மிகவும் பிடிக்கும் என கூறுகிறார்கள். ஆனால் ஏன் தமிழை ஆட்சி மொழியாக மறுக்கிறார்கள். குஜராத் மாநிலத்தை பொருத்தவரையில் குஜராத்தி மொழி இடத்தில் தான் உள்ளது. இந்தி தான் உங்களது மாநிலத்தின் முதல் மொழி. மோடி அமித்ஷா இருவரும் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். ஆனால் நாங்கள் அந்த நிலைக்கு வர விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்