எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !

முதல்வரும் த.வெ.க தலைவர் விஜயின் ரசிகர் தான் என தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார்.

aadhav arjuna and vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் த.வெ.க தலைவர் விஜய், வெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பல விஷயங்களை பேசியது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காகவும் மாறியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர் முதல்வர் விஜய்யை பார்த்து காப்பி அடிப்பதாக பேசினார். இது குறித்து பேசிய அவர் ” எங்களுடைய தலைவரை சிலர் நடிகர் என்று விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கு நான் இப்போது ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அது என்னவென்றால், அவர் இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு மக்களுக்காக வருகிறேன் என கூறிவிட்டார். ஆனால், எங்களின் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடிக்கிறீர்கள்? அவரை போலவே பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள். உங்களுக்கு முதல்வரும் ரசிகர்தான்” எனவும் வெளிப்படையாகவே ஆதவ் அர்ஜுனா பேசினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு , பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளை தொகுத்து அதற்கு “உங்களில் ஒருவன் பதில்கள்” எனும் நிகழ்வில்  பதில் அளித்திருந்தார். அப்போது  வெள்ளை நிற சட்டையுடன் காக்கி கலர் பேண்ட் அணிந்திருந்தார். அதனை குறிப்பிட்டு தான் அவர் விஜயை பார்த்து காப்பி அடித்துவிட்டதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்