“தயிருக்கு தஹி, தஹிக்கு இங்கு நஹி” – அமைச்சர் நாசர் பேச்சு

Default Image

மானிய கோரிக்கை விவாதத்தில் 48 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் நாசர்.

தமிழ்நாடு: தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் மீது பால் வளத்துறை அமைச்சர் நாசர் பதிலளித்து வந்த நிலையில், தஹி விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தயிருக்கு தஹி, தஹிக்கு இங்கு நஹி”, “அந்தி வந்தால் நிலவு வரும், இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்” என திட்டவட்டம்.

ஆன்லைனிலும் ஆவின் பொருட்களை:

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்களை உடனுக்குடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளவும், ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது போக, எருமை வளர்ப்பை ஊக்குவிக்க எருமை கன்று வளர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் வகைகள் மற்றும் பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

ஆவினின் புதிய சாக்லேட் உற்பத்தி அளகு அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் நிறுவப்படும் எனவும், ஆவின் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் புதுப்பிக்கும் பணிகள் கணினி மயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில், பால் உற்பத்தியின் கூறுகள் குறித்து இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாதரவரத்தில் ‘பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம்’ அமைக்கப்படும் என்றும், அதில் பால்வளத்துறையின் தொடக்கம், வளர்ச்சி, தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கப் படங்கள், காட்சி படங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்