மகசூலும் வருவாயும் அதிகமாக ஈட்டித்தரும் நிலக்கடலை..!!
நல்ல மகசூலும் வருவாயும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் நிலக்கடலை மூலம் கிடைப்பதாககச் புதுவையைச் சேர்ந்த விவசாயி சொல்கிறார் .
புதுச்சேரி, திருபுவனையை அடுத்துள்ளது சிலுக்காரிப்பாளையம். . 2011 முதலே இயற்கை முறையில், பாரம்பரிய நெல் ரகங்கள், வாழை மற்றும் மணிலா எனப்படும் நிலக்கடலை சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளார்.
ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையாகக் கிடைக்கும் எரு மற்றும் குப்பைகளை இடுபொருளாகப் பயன்படுத்துவதால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக அவர் தெரிவிக்கிறார். மேலும், ரசாயன உரங்களைத் தவிர்ப்பதன் மூலம், சுவையான, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத நல்ல நிலக்கடலைகளை உற்பத்தி செய்கிறோம் என்ற மன திருப்தி இருப்பதாகவும் சுப்பிரமணியன் கூறுகிறார்.
கடலைச் செடியிலிருந்து கடலையைப் பிரித்தெடுக்க தன் சொந்த முயற்சியில் ஒரு எளிய இயந்திரத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த இயந்திரத்தை சிறுவர்களே பயன்படுத்தமுடியும் என்பதால், அவருடைய பிள்ளைகளுக்கும் இதன் மூலம் விவசாய ஆர்வம் ஊற்றெடுப்பதாகக் கூறுகிறார் சுப்பிரமணியன்.
ரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிரிடும் போது ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இயற்கை முறையில் செய்யும் நிலக்கடலை சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 18 மூட்டைகளே கிடைக்கும். ரசாயன உர மணிலா மூட்டை ஒன்றுக்கு ஆயிரத்து 800 வரை விற்கப்படும் நிலையில் இயற்கையான மணிலா ஒரு மூட்டை இரண்டாயிரத்து 500 வரை விற்கப்படுகிறது என்றும், சுவையின் காரணமாக வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்வதாகவும் சுப்பிரமணியன் தெரிவிக்கிறார்.