திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை வகித்தார். திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.அவர் கூறியதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கட்டளைப்படி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சுசீந்திரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி மாபெரும் முழு அடைப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய அரசு கர்நாடக தேர்தலை காரணம் காட்டாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உரிய அழுத்தம் கொடுக்காத அதிமுகவினர் தற்போதுஉண்ணாவிரதம் இருப்பது விந்தையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…